பதிவுகள்

திராவிடம் ஓர் ஆலமரம்

விதை – வேர் – விழுது

(1949 முதல்)

1957 – திமுக வரலாறு

பிப்ரவரி மாதத்தில், திமுகவின் தேர்தல் சிறப்பு மாநாடு சென்னையில் கூடியது. அந்த மாநாட்டில் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. மாநிலங்களுக்கு தேவை என்றால் இந்திய தேசியத்தில் இருந்து பிரிந்து தனித்து இயங்க வழிவகை செய்வது செய்வது, மாநில அதிகார வரம்பையும், வரிவிதிப்பையும் அதிகரிப்பது, ஐந்தாண்டு திட்டத்தினை நிறைவேற்றும் பொறுப்பினை மாநில அரசிடமே ஒப்படைப்பது.சக்திக்கு ஏற்றபடி உழைப்பு, தேவைக்கு ஏற்றபடி வசதி என்ற நிலை தொழிலாளர்களுக்கும் ஏற்படவேண்டும். சட்டமன்றத்திற்கு 124 இடங்களிலும், நாடாளுமன்றத்திற்கு 11 இடங்களிலும் தி.மு.க போட்டியிட்டது.திமுகவின்…

1956 – திமுக வரலாறு

தட்சிண பிரதேசம் என்பது தமிழகம், கர்நாடகம், கேரளம் மற்றும் ஆந்திர பிரதேசங்கள் ஒரே மாகாணமாக உருவாக்கலாம். இந்திய அளவில் மொத்தம் ஐந்து மாகாணங்கள் என்பது திரு.நேரு அவர்களின் நிலைப்பாடு. திராவிடர் கழகம் சார்பாக திரு.பெரியார் அவர்கள், இந்தத் திட்டத்திற்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார். பெரியார் அவர்கள், தட்சிணப் பிரதேசம் வந்தால் தமிழர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து. ஏற்கனவே, இருக்கும் வேலைவாய்ப்புகளில் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகம். இந்நிலையில் மீதி உள்ள வேலைவாய்ப்புகளை மலையாளிகளுக்கும், கன்னடிகர்களுக்கும் போய்விடும். நாம் கூலிகளாக வாழ…

1955 – திமுக வரலாறு

திரு. நேரு அவர்கள் மொழிவாரி மாநிலப் பிரிவினையை தவிர்க்க நினைத்தார். காரணம் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டால் இன உணர்வு மேலோங்கி, அகில இந்தியம் என்கிற தேசிய உணர்வு குறைந்துவிடும் என்று நினைத்தார். இதனால் பல பிரச்சினைகள் உருவாகலாம் என்று யோசித்தார். அண்ணா அவர்கள், தம்பிகளுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் “ஆரியம் ஆதிக்கம் செலுத்துவதற்குக் காரணம், ஆரியம் ஆரியரிடம் மட்டுமல்லாமல், திராவிடச் சமுதாயத்தினருடனும் இன்னும் பெருமளவுக்கு இருப்பதாலும், ஆரியத்திடம் அச்சப்படும் நிலையில் ஆளவந்தார்கள் இருப்பதாலும் தான்….தம்பி ! கழகம்…

1954 – திமுக வரலாறு

திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த வரை, அண்ணா அவர்கள் நிறைய யோசித்தார்கள். தேர்தல் அரசியலில் இறங்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பமான நிலை வேறு. அத்தோடு, திரு.காமராஜர் அவர்களை எதிர்த்தால், திரு.ராஜாஜி அவர்களை ஆதரிப்பது போன்று ஆகிவிடும். ராஜாஜியை ஆதரித்தால் குலக்கல்விக்கு அதரவளித்ததைப்போல் ஆகிவிடும்.அதனால், ராஜாஜி அவர்களை ஆதரிக்க அண்ணாவிற்கு துளியும் விருப்பமில்லை. அதன் காரணமாகவே, திரு.காமராஜர் அவர்களை ஆதரிக்கலாம் என்ற முடிவிற்கு வந்தார் அறிஞர்.அண்ணா. உதயசூரியன் சின்னத்தை உருவாக்கியது திரு. ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள். திமுக சட்டமன்றத்தில்…

1953 – திமுக வரலாறு

ஆந்திரா பிரிந்தபோது, தங்களது தலைநகர் சென்னையில் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இதனை முற்றிலுமாக எதிர்த்தது திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிடர் கழகம். தந்தை பெரியார் அவர்கள், “வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு செல்பவன், வீட்டைவிட்டுதான் செல்ல வேண்டுமே தவிர, என் சமையலை மட்டும் இந்த வீட்டில் வைத்துக் கொள்கிறேன் என்று சொல்லக்கூடாது” என்று கூறினார்.ராஜாஜி ஒரு பொது கூட்டத்தில், “அவரவர் சாதி தொழிலை அவரவர் செய்துவர வேண்டும். அனைவரும் படிக்க வேண்டும் என்றால்,…

1952 – திமுக வரலாறு

1952 இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. ஆந்திரம் ,கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய திராவிட இன மொழிவாரி மாநிலங்களை உள்ளடக்கிய, தனியாட்சி பெற்ற திராவிடநாடு கொள்கையை ஏற்றுக் கொள்ளும் வேட்பாளர்களுக்கு தங்களது ஆதரவை அளிப்பது என்று முடிவு செய்தது திமுக.திமுக ஆதரவு பெற்று வெற்றி பெற்றிருந்த காமன்வீல் கட்சி, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி போன்றவை காங்கிரஸோடு இணைந்து விட்டன. இந்த நிகழ்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களிடமும், தலைவர்களிடமும் இடையில் பெரும் அதிருப்தியை…

1951 – திமுக வரலாறு

5 நவம்பர் 1951இல் திமுகவிற்கு என்று தலைமையிடமாக, சென்னை ராயபுரம் பகுதியில், சூரிய நாராயண செட்டி தெருவில் 24ம் எண் கட்டிடம் வாங்கப்பட்டது. இதனை டிசம்பர் 2ம் தேதி அன்று, தலைமை கழகமான அறிவகத்தை, தோழர் வி.எம் ஜான் அவர்கள் திறந்து வைத்தார்கள். அறிஞர் அண்ணா அவர்களும்., கே.ஆர் ராமசாமி அவர்களும் நாடகங்கள் நடத்தி வந்த நிதியை, கட்டிடம் வாங்குவதற்கு பயன்படுத்தினார்கள்.

1950 – திமுக வரலாறு

குடியரசு நாளை அதிருப்திக்கும், வெறுப்புக்கும், கண்டனத்திற்கும் உரிய நாள் என்று அறிஞர் அண்ணா அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள். திராவிட அமைப்பை பாழ்படுத்தும் புதிய அரசியலமைப்பை வெளியிட்ட நாள். குடியரசு விழா என்ற பெயரில் ஏமாற்றும் விழா. உரிமை வழங்கும் நாள் அல்ல, உரிமையை பறிக்கும் நாள். ஆகவே குடியரசுநாளை நாங்கள் எதிர்க்கிறோம் என்று அண்ணா தெரிவித்தார்.

1949 – திமுக வரலாறு

திராவிட முன்னேற்ற கழகம் என்பதை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு தமிழ்நாடு சோசியலிஸ்ட் கட்சி, திராவிட சோஷலிஸ்ட் கழகம், திராவிட சமதர்ம கழகம் என பல பெயர்களும் பரிசீலிக்கப்பட்டது அத்தோடு ஆங்கிலத்திலும் பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அப்போது Dravidian Progressive Federation என்ற ஆங்கில பதத்திற்கு ஏற்ப திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயர் உருவானது.


பதிவுகளை பின் தொடர,

Get new content delivered directly to your inbox.

Design a site like this with WordPress.com
Get started