1954 – திமுக வரலாறு

திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த வரை, அண்ணா அவர்கள் நிறைய யோசித்தார்கள். தேர்தல் அரசியலில் இறங்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பமான நிலை வேறு. அத்தோடு, திரு.காமராஜர் அவர்களை எதிர்த்தால், திரு.ராஜாஜி அவர்களை ஆதரிப்பது போன்று ஆகிவிடும். ராஜாஜியை ஆதரித்தால் குலக்கல்விக்கு அதரவளித்ததைப்போல் ஆகிவிடும்.அதனால், ராஜாஜி அவர்களை ஆதரிக்க அண்ணாவிற்கு துளியும் விருப்பமில்லை. அதன் காரணமாகவே, திரு.காமராஜர் அவர்களை ஆதரிக்கலாம் என்ற முடிவிற்கு வந்தார் அறிஞர்.அண்ணா. உதயசூரியன் சின்னத்தை உருவாக்கியது திரு. ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள். திமுக சட்டமன்றத்தில் நுழைவது ஆபத்தானது. ஆட்சியின் பக்கம் கவனம் திரும்பினால், கழகத்தின் பிரச்சாரங்களில் தொய்வு ஏற்பட ஆரம்பித்து விடும் என்ற கொள்கை கொண்டிருந்தார் அறிஞர் அண்ணா அவர்கள். இதனை மாற்றிய பெரும் பங்கு திரு. ஏ. கோவிந்தசாமி அவர்களையே சேரும்.

Design a site like this with WordPress.com
Get started